கடந்த 11ஆம் திகதி எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன. இதனை அடுத்து பேரூந்து கட்டணங்களை அதிகரிக்குமாறு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கங்களினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
Image Credits to its owner ONLY |
இன்று 19ஆம் திகதி தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கங்களுக்கும் போக்குவரத்து அமைச்சருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்போது நாளை 20ஆம் திகதி நள்ளிரவு முதல் பேரூந்து கட்டணங்களை 4%த்தால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அடிப்படைக் கட்டணமான 12 ரூபாவில் மாற்றம் இல்லை. மேலும் இந்தக் கட்டண அதிகரிப்பு சொகுசு பேரூந்துகள் மற்றும் அதிவேக வீதியில் சேவையிலீடுபடும் பேருந்துகளுக்கு இந்தக் கட்டண அதிகரிப்பு பொருந்தாது.
கடந்த மே மாதம் 10ஆம் திகதி பேரூந்து கட்டணங்கள் 12.5%த்தினால் அதிகரிக்கப்பட்டிருந்தது. சமையல் எரிவாயு விலை மற்றும் வெதுப்பக உணவுப் பொருட்களின் விலை ஆகியவற்றிலும் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.
#LKA #LK #BusFair #PriceIncrease #LKGovt #Transport #Gas #LitroGas #BakeryFoods #Economy #FuelPrice #Ceypetco #PrivateBusAssociation #News #SigaramNews
No comments:
Post a Comment