Pages

Wednesday, September 19, 2018

பாகிஸ்தான் | முன்னாள் பிரதமர் நவாஸ் விடுதலை

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த பத்து ஆண்டுகால சிறைத்தண்டனை இடைநிறுத்தி வைக்கப்படுவதாக பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனமான மொஸாக் ஃபொன்சேகா நிறுவனத்தில் இருந்து கோடிக்கணக்கான ரகசிய ஆவணங்கள் கசிந்தன. இவை பனாமா ஆவணங்கள் எனக் குறிப்பிடப்பட்டன. இவற்றில் உலகின் அதிகாரமிக்கவர்களும் பணக்காரர்களும் வரி ஏய்க்க உதவும் நாடுகளை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்கிற விவரங்களை அந்த ஆவணங்கள் உலகுக்கு வெளிப்படுத்தின. 

Image Credits to Its Owner ONLY

அந்த பனாமா ஆவணங்களில் முன்னாள் மற்றும் இந்நாள் அரச தலைவர்கள் 72 பேருடன் தொடர்புடைய ஆவணங்களும் உள்ளடங்கியிருந்தன. அதில் அப்போதைய பாகிஸ்தானின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப்பின் மகன்கள் ஹசன் நவாஸ் மற்றும் ஹுசைன் நவாஸ், மகள் மரியம் நவாஸ் ஆகியோரின் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் நவாஸின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. 

எதிர்க்கட்சி பிரதமர் நவாஸுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு முதல் வழக்கை விசாரித்து வந்தது. 2018 ஜூலையில் நவாஸ் ஷெரீஃப் மற்றும் மரியம் ஆகியோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர்கள் தாக்கல் செய்த மேன்முறையீட்டின் அடிப்படையில் சிறைத்தண்டனையை நீதிமன்றம் இடைநிறுத்திவைத்துள்ளது. 

#Pakistan #NawazSharif #Panamagate #PanamaPaperLeaks #MaryamNawaz #Corruption #PakistanCourt #Justice #PakistanPrimeMinister #Jail #Bail #Appeal #SigaramNEWS  

No comments:

Post a Comment