Pages

Thursday, September 20, 2018

இலங்கை | அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

செப்டெம்பர் 20ஆம் திகதி நள்ளிரவு முதல் பேரூந்து கட்டணங்கள் 4%த்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன. அடிப்படைக் கட்டணமான 12 ரூபாவில் மாற்றம் இல்லை. 

செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனியின் விலை கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சீனியின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் சீனியின் புதிய மொத்த விற்பனை விலை 105 ரூபாவாக அமையும். 



Image credits to its owner ONLY 

12.5 கி.கி சமையல் எரிவாயுவின் விலை 195ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இந்த தீர்மானம் வாழ்க்கைச் செலவுக் குழுவினால் குறித்த அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

வரித்திருத்தம் மற்றும் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் தொடர்ச்சியான பெறுமதி வீழ்ச்சி ஆகியவற்றை கருத்திற்கொண்டு ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 5 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக பிறீமா நிறுவனம் அறிவித்திருந்தது. அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுக்கவுள்ளது. கோதுமை மாவின் ஒரு கிலோவுக்கான விற்பனை விலை 87 ரூபாவாக அமைய வேண்டும் என அதிகார சபை அறிவித்துள்ளது. 

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. வருட ரீதியாக டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி வீதம் வருமாறு: 1977 - 8.95 ரூபா, 1989 - 36.06 ரூபா, 1994 - 49.17 ரூபா, 2005 - 100.38 ரூபா, 2015 - 135.88 ரூபா. 19.09.2018 திகதி - 167.41 ரூபா. 

நவம்பர் மாதம் 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் நாணயப் பெறுமதி வீழ்ச்சியும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

#Budget #Budget2019 #LKA #LK #LKGovt #PriceHike #PriceIncrease #USD #LKR #PrimaFlour #MilkPowder #Gas #LPGGas #LitroGas #LaugfsGas #News #SigaramNews 

No comments:

Post a Comment