Pages

Tuesday, September 18, 2018

இலங்கை | எம்.ஜி.ஆரின் 102அவது பிறந்தநாள் நினைவு நிகழ்வு கண்டியில் - ஒரு தொகுப்பு

எம்.ஜி.ஆர் எனப்படும் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 17.01.1917 அன்று மருதூர் கோபாலமேனன் சத்தியபாமா தம்பதிகளுக்கு இலங்கை, கண்டி, நாவலப்பிட்டியில் மகனாகப் பிறந்தார். எம்.ஜி.ஆரின் தந்தை வழக்கறிஞராக கேரளாவில் பணியாற்றி வந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் தமிழ்நாடு, கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். பின்னர் நாடகங்களில் நடித்து திரைப்பட நடிகரானார். தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு தமிழக முதலமைச்சராக பதவி வகித்தார். 24.12.1987இல் எம்.ஜி.ஆர் காலமானார். 



Image Credits to its owner only


எம்.ஜி.ஆரின் 102ஆவது பிறந்தநாள் நினைவு நிகழ்வுகள் அவர் பிறந்த இடமான கண்டியில் 16.09.2018 அன்று இடம்பெற்றன. தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தமிழக சிவகாசி மாவட்ட எம்.எல்.ஏ, நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ், நடிகர் பாண்டியராஜ், நகைச்சுவை நடிகர் ரமேஷ் கண்ணா, இசையமைப்பாளர் தேனிசைத்தென்றல் தேவா, குணச்சித்திர நடிகர் சரவணன் ஆகியோர் தமிழகத்தின் சார்பாக விழாவில் கலந்து கொண்டனர். 


Image Credits to its owner only


இலங்கை இராஜாங்க கல்வி அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் விழாவிற்கு தலைமை தாங்கினார். கண்டி, பொல்கொல்ல கூட்டுறவு சங்க மண்டபத்தில் விழா இடம்பெற்றது. இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோர் இலங்கை சார்பில் கலந்து கொண்டனர். 


Image Credits to its owner only


கே. பாக்கியராஜ் தலைமையிலான பட்டிமன்றம், தேனிசைத் தென்றல் தேவாவின் இசை நிகழ்ச்சி, நூற்றாண்டு விழா சிறப்பு நூல் வெளியீடு, இந்திய நடிகர்களுக்கான எம்.ஜி.ஆர் விருது வழங்கும் நிகழ்வு ஆகியன விழாவின் முக்கிய நிகழ்வுகளாகும். எம்.ஜி.ஆரின் விவரணப் படம் காண்பிக்கப்பட்டதுடன் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. 


Image Credits to its owner only


எம்.ஜி.ஆர் இலங்கையில் பிறந்திருந்தாலும் அவர் ஒரு இந்தியராகவே வாழ்ந்து மறைந்தார். தமிழக மக்கள் இதய தெய்வம், புரட்சித் தலைவர் என்று பல பட்டங்களை அவருக்கு வழங்கியுள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பியதுடன் தமிழக மக்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றியுள்ளார். திரையுலகில் அவரது நடிப்பு ஈடு இணையற்றதாகும். நடிகர், அரசியல்வாதி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு சிகரம் இணையத்தளம் சார்பிலும் இதய அஞ்சலிகளை உரித்தாக்குகிறோம்!

#MGR #ADMK #AIADMK #TN #TamilCinema #Politics #Pakyaraj #Deva #RameshKanna #Senkottaiyan #TNGovt #India #SriLanka #LKA #News #MGRAwards #Sigaram 

No comments:

Post a Comment