Pages

Friday, February 1, 2019

உலகம் | 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் கோரி பூகர்

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கோரி பூகர் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

செனட் சபையில் நியூ ஜெர்ஸி மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 49 வயதான கோரி பூகர், 2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக இன்று (பெப்ரவரி 01) காணொளி ஒன்றின் வாயிலாக அறிவித்தார். 




"நாம் எமது வலிகளை பொதுவான நோக்கத்திற்காக ஒன்று சேர்ப்போம். அமெரிக்காவுடன் இணைந்து நாம் ஒன்றாக உயர்வோம்" என்று பூகர் தெரிவித்துள்ளார். 

ஆபிரிக்க அல்லது கறுப்பின அமெரிக்கரான பூகர், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவை பிரதிபலிப்பவராக இருக்கிறார். 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக களமிறங்கியுள்ள எலிஸபெத் வாரென் முதல் கமலா ஹாரிஸ் வரையிலான எட்டு போட்டியாளர்களுடன் கோரி பூகரும் களமிறங்குகிறார். 

அத்துடன் அமெரிக்காவின் முதல் கறுப்பின பெண் ஜனாதிபதியாக எதிர்பார்த்துள்ள கமலா ஹாரிஸுக்கு எதிராகவும் இவர் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்கா | 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் குரே பூகர்  
https://sigaram2.blogspot.com/2019/02/Cory-Booker-Run-US-Elections.html 

No comments:

Post a Comment