Pages

Sunday, September 23, 2018

இலங்கை | செய்தித் துளிகள் 2018/09/23

செப்டெம்பர் 25ஆம் திகதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் "ஐக்கிய நாடுகள் சபையை அனைத்து மக்களுக்கும் இணக்கமானதாக ஆக்குதல் மற்றும் அமைதியும் நேர்மையும் மற்றும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகங்களுக்கான பூகோள தலைமைத்துவமும் பகிர்ந்த பொறுப்புகளும்" என்னும் கருப்பொருளில் ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது. 


இந்த ஐ.நா சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 22ஆம் திகதி அமெரிக்காவுக்குப் பயணமாகியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் தொடர்பான அழுத்தங்கள் ஐ.நா சபையினால் தொடர்ச்சியாக இலங்கை மீது முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த முறையும் அந்த அழுத்தம் பிரயோகிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். 




19ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டார். அந்த தகவல்கள் இதோ: 

கடந்த ஆட்சி: 
2014 ஜனவரி - 2396 ரூபா 
2014/12/07 - 1836 ரூபா 

இந்த ஆட்சி: 
2015/01/29 - 1596 ரூபா 
2015/07/15 - 1496 ரூபா 
2015/11/23 - 1346 ரூபா 
2016/11/23 - 1321 ரூபா 
2017/09/26 - 1431 ரூபா 
2018/04/18 - 1676 ரூபா 
2018/06/30 - 1538 ரூபா 
2018/09/19 (இவ்வாரம்) - 1733 ரூபா 

#LK #LKA #Gas #LPGas #GasPrice #LitroGas #PriceIncreased #GoodGovernance #RajithaSenaratne #Maithripala #UPFA #UNP #UN #US #NewYork #SigaramNews

No comments:

Post a Comment