Pages

Wednesday, September 19, 2018

இலங்கை | மலையகம் | கொட்டகலை - லொக்கீல் தோட்ட பாதை புனரமைப்பு

கொட்டகலை - லொக்கீல் தோட்ட உள்நுழையும் வீதி தற்போது செப்பனிடப்பட்டு வருகிறது. 










சிறிய அளவு தூரம் கொண்ட வீதியை அபிவிருத்தி செய்வதற்கு அதிகளவு மூலப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

கட்டாயம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பகுதி இது. என்றாலும் முறையாக வீதி செப்பனிடப்படவேண்டிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. 




வீதி முறையாக செப்பனிடப்படாத பட்சத்தில் ஒரு வருடத்திற்குள்ளாகவே மீண்டும் வீதி பழைய நிலையை அடைந்துவிடும். 

இந்த அபிவிருத்தி யாருக்காக என்ற கேள்வி ஒரு புறம் இருக்க மக்களின் பணத்தை வீணடிப்பது ஏன் என்கிற கேள்வியும் இங்கே எழுகிறது. 

பிரதேச சபை, மாகாண சபை, மத்திய அரசு இவற்றில் இந்த அபிவிருத்திக்கு யார் பொறுப்பு? யார் பொறுப்பாக இருந்தாலும் முறையாக திட்டத்தை நிறைவு செய்ய வேண்டியது அவசியம் அல்லவா? 

இந்த அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பில் உரிய தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும். மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படக்கூடாது. அத்துடன் அபிவிருத்தி நடவடிக்கைகள் உரிய நடைமுறைகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படுமா? 

Pic by: Sigaram Bharathi

#SL #LKA #LK #News #Development #UC #PC #LKGovt #RoadDevelopment #UpCountry #Tax #KotagalaPradesiyaSabha #LocalGovernment #SigaramNews

No comments:

Post a Comment