Pages

Sunday, September 23, 2018

இந்தியா | செய்தித்துளிகள் 2018/09/23

இந்திய மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையே அடுத்த வாரம் நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்தாகியுள்ளது. இந்தவாரம் காஷ்மீரில் மூன்று காவல்துறையினரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றமை மற்றும் இந்திய இராணுவம் சுட்டுக் கொலை செய்த பாகிஸ்தான் தீவிரவாதி புர்ஹான் வானிக்கு பாகிஸ்தானில் தபால் தலை வெளியிட்டமை ஆகிய காரணங்களே பேச்சுவார்த்தை இரத்தானதின் பின்னணியாகும்.




எதிர்கால தேர்வு முறையில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் குறித்த வரைவு அறிக்கையை பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. கணினி தேர்வு முறை, உயர் சிந்தனை ஆய்வு திறன் தேர்வு, சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் புத்தகங்களை பார்த்து பதில் எழுதுவது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 

நடிகர் விக்ரம் நடித்து வெளியாகியுள்ள 'சாமி 2' திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் முதல் நாளிலேயே வெளியாகியுள்ளது. நடிகர் சங்கத் தலைவர் விஷால் அனுமதியின்றி திரைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன் என சூளுரைத்திருந்தார். ஆனால் அவரது 'துப்பறிவாளன்' திரைப்படமே முதல் நாளில் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

#News #India #UGC #Exams #Pakistan #Kashmir #Politics #Students #Reading #sigaram 

No comments:

Post a Comment