Pages

Saturday, September 29, 2018

இலங்கை | கூட்டு ஒப்பந்தத்தின் எதிர்காலம் என்ன?

கூட்டு ஒப்பந்தம் என்றால் என்ன? 

"குறைந்தபட்ச சம்பளம் என்ற விடயம் முதன் முதலில் 1927ம் ஆண்டு சம்பளக் குழுவினால் குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின் (Minimum Wages Ordinance) கீழ் தீர்மானிக்கப்பட்டது. சம்பள நிர்ணயசபை தாபிக்கப்படும் வரை நாட் சம்பளத்தை தோட்ட உரிமையாளர்கள் தன்னிச்சையாகத் தீர்மானித்தனர். சம்பளத்திற்குப் பதிலாக அரிசி மற்றும் ஏனைய உணவு பண்டங்கள் வழங்கப்பட்டதுடன் தொடர்ச்சியான சம்பளமும் வழங்கப்படவில்லை. 

Wednesday, September 26, 2018

இலங்கை | பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை - ஒரு பார்வை

மலையக மக்களின் அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் திட்டங்கள் இதுவரை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த நிறுவனம் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் கீழ் செயற்பட்டு வருகிறது. ஆனால் இது முழுமையான அரச நிறுவனம் அல்ல. ஆகவே அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் இதுநாள் வரை பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்தன. 

Sunday, September 23, 2018

இலங்கை | செய்தித் துளிகள் 2018/09/23

செப்டெம்பர் 25ஆம் திகதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் "ஐக்கிய நாடுகள் சபையை அனைத்து மக்களுக்கும் இணக்கமானதாக ஆக்குதல் மற்றும் அமைதியும் நேர்மையும் மற்றும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகங்களுக்கான பூகோள தலைமைத்துவமும் பகிர்ந்த பொறுப்புகளும்" என்னும் கருப்பொருளில் ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது. 

இந்தியா | செய்தித்துளிகள் 2018/09/23

இந்திய மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையே அடுத்த வாரம் நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்தாகியுள்ளது. இந்தவாரம் காஷ்மீரில் மூன்று காவல்துறையினரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றமை மற்றும் இந்திய இராணுவம் சுட்டுக் கொலை செய்த பாகிஸ்தான் தீவிரவாதி புர்ஹான் வானிக்கு பாகிஸ்தானில் தபால் தலை வெளியிட்டமை ஆகிய காரணங்களே பேச்சுவார்த்தை இரத்தானதின் பின்னணியாகும்.

Saturday, September 22, 2018

இலங்கை | வாகனங்களின் விலை உயரும் - இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை குறைந்தபட்சம் 250,000 இலங்கை ரூபாவினால் உயரும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIAL) தெரிவித்துள்ளனர். 

இலங்கை | நாணய மாற்று விகிதம் 22.09.2018

1977 - 8.95 ரூபா 
1989 - 36.06 ரூபா 
1994 - 49.17 ரூபா 
2005 - 100.38 ரூபா 
2015 - 135.88 ரூபா 

இலங்கை | இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்?

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில் ஆட்சி மாற்றம் குறித்து தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது. இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அடுத்தடுத்து இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ மூன்றாம் முறையும் ஜனாதிபதியாகும் வாய்ப்பை ஐக்கிய தேசியக் கட்சியின் துணையுடன் முறியடித்து ஆட்சியைப் பிடித்தார் மைத்திரிபால.

Thursday, September 20, 2018

இலங்கை | அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

செப்டெம்பர் 20ஆம் திகதி நள்ளிரவு முதல் பேரூந்து கட்டணங்கள் 4%த்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன. அடிப்படைக் கட்டணமான 12 ரூபாவில் மாற்றம் இல்லை. 

செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனியின் விலை கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சீனியின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் சீனியின் புதிய மொத்த விற்பனை விலை 105 ரூபாவாக அமையும். 


Wednesday, September 19, 2018

இலங்கை | பேரூந்து கட்டணம் அதிகரிப்பு

கடந்த 11ஆம் திகதி எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன. இதனை அடுத்து பேரூந்து கட்டணங்களை அதிகரிக்குமாறு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கங்களினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. 

பாகிஸ்தான் | முன்னாள் பிரதமர் நவாஸ் விடுதலை

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த பத்து ஆண்டுகால சிறைத்தண்டனை இடைநிறுத்தி வைக்கப்படுவதாக பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இலங்கை | செய்தித்துளிகள் 2018/09/19

காலநிலை 

மத்திய, வடமேல், வடமத்திய, தென்மாகாணங்கள், பதுளை மற்றும் தென் மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். மத்திய, சப்ரகமுவ, மேல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும். வடமேல் மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். 

இலங்கை | மலையகம் | கொட்டகலை - லொக்கீல் தோட்ட பாதை புனரமைப்பு

கொட்டகலை - லொக்கீல் தோட்ட உள்நுழையும் வீதி தற்போது செப்பனிடப்பட்டு வருகிறது. 


Tuesday, September 18, 2018

இலங்கை | செய்திகள் ஐந்து 18.09.2018 | யானை விபத்து - டாலர் பெறுமதி - தரமற்ற எண்ணெய் - படகு விடுவிப்பு - மனித அபிவிருத்தி சுட்டெண்

இன்று (18/9) செவ்வாய்க்கிழமை ஹபரண பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலில் மோதுண்டு இறந்துள்ளன. இரண்டு குட்டி யானைகளும் அவைகளின் தாயான கர்ப்பமான யானையுமே உயிரிழந்துள்ளன. எண்ணெய்த் தாங்கி ரயிலினாலேயே மேற்படி விபத்து நிகழ்ந்துள்ளது. இலங்கையில் தற்போது 7500 வரையிலான யானைகள் உள்ளன. கடந்த ஐந்து வருடங்களில் 375 பேர் யானைகளினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்தியா | பள்ளி வளாகத்தில் பாலியல் வல்லுறவு | கருவைக் கலைத்த பள்ளி!

இந்தியா, உத்தரகண்ட் மாநிலத்தில் பள்ளி வளாகத்தில் தங்கிப் படித்துவரும் 10ஆம் வகுப்பு மாணவியை அதே பள்ளியில் படித்துவரும் 12ஆம் வகுப்பு நான்கு மாணவர்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளனர். இதன் காரணமாக பள்ளி நிர்வாகம் குறித்த மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரை வழங்கியுள்ளது. தகவலறிந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். விசாரணை இடம்பெற்று வருகிறது. 

இலங்கை | எம்.ஜி.ஆரின் 102அவது பிறந்தநாள் நினைவு நிகழ்வு கண்டியில் - ஒரு தொகுப்பு

எம்.ஜி.ஆர் எனப்படும் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 17.01.1917 அன்று மருதூர் கோபாலமேனன் சத்தியபாமா தம்பதிகளுக்கு இலங்கை, கண்டி, நாவலப்பிட்டியில் மகனாகப் பிறந்தார். எம்.ஜி.ஆரின் தந்தை வழக்கறிஞராக கேரளாவில் பணியாற்றி வந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் தமிழ்நாடு, கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். பின்னர் நாடகங்களில் நடித்து திரைப்பட நடிகரானார். தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு தமிழக முதலமைச்சராக பதவி வகித்தார். 24.12.1987இல் எம்.ஜி.ஆர் காலமானார்.