Pages

Tuesday, December 17, 2019

பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

(Pic credit: It's respective owner)

தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் விசேட நீதிமன்றம் ஒன்றினால் இன்று இந்த தண்டனை விதிக்கப்பட்டது. 

எட்டுத்திக்கும் செய்தி சொல்லும் சிகரம் செய்திகள்...!

2006ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் செய்தித் துறையில் சேவையாற்றி வருகிறது சிகரம். 

கையெழுத்துப் பத்திரிகையாக ஆரம்பித்த பயணம், வலைத்தளம், இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளம் என பல்வேறு பரிமாணங்களை அடைந்திருக்கிறது. 

தொடர்ந்தும் மக்களுக்கு செய்திகளையும் பல்வேறு துறைசார்ந்த தகவல்களையும் கொண்டு செல்வதில் சிகரம் முன்னிற்கும். 

தொடர்ந்தும் எமது வலைத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் எமது செய்திகளுடன் இணைந்திருங்கள்...

Monday, December 16, 2019

தரமுயர்த்தப்பட்ட இராணுவத்தினர்

இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவியில் தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 



இராணுவ தளபதியின் கோரிக்கைக்கு இணங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். 

இராணுவ ஊடகப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 

இதன்படி, நான்கு பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர். 

அத்துடன், 25 கொலொனெல்கள் பிரிகேடியர்களாகவும், 34 மேஜர்கள் லெப்டினன்ட் கொலொனெல்களாகவும் தரமுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Monday, April 8, 2019

மலையகத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும்

யார் மலையகத் தமிழர்? 

மலையக மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வரலாறு 1800ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் ஆரம்பமாகின்றது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கள். கூலித்தொழிலாளர்கள் என்னும் அடிப்படையிலேயே அவர்கள் முதலில் வந்திருந்தனர். காலஞ் செல்லச்செல்ல அவர்களுக்கும் வாழ்வியல் மற்றும் அரசியல் ரீதியான உரிமைகள் வழங்கப்பட்டன. எனினும் 1948ஆம் ஆண்டில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் நிறைவேற்றப்பட்ட பல்வேறு சட்டங்கள் மலையகத் தமிழர்களை வெகுவாகப் பாதித்தன. 

Wednesday, March 6, 2019

அமெரிக்கா | 2020 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - ஹிலாரி கிளின்டன்

2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ஹிலாரி கிளின்டன் அறிவித்துள்ளார். 

Tuesday, March 5, 2019

வெனிசுவேலாவுக்குத் திரும்பினார் ஜுவான் கைடோ

தென்அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜுவான் கைடோ நேற்று (04) நாடு திரும்பினார். 



Friday, February 1, 2019

உலகம் | 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் கோரி பூகர்

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கோரி பூகர் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

செனட் சபையில் நியூ ஜெர்ஸி மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 49 வயதான கோரி பூகர், 2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக இன்று (பெப்ரவரி 01) காணொளி ஒன்றின் வாயிலாக அறிவித்தார்.