Pages

Tuesday, March 5, 2019

வெனிசுவேலாவுக்குத் திரும்பினார் ஜுவான் கைடோ

தென்அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜுவான் கைடோ நேற்று (04) நாடு திரும்பினார். 




வெனிசுவேலாவில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையையடுத்து தன்னைத் தானே இடைக்கால ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவரான ஜுவான் கைடோவுக்கு நாடு திரும்பிய போது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

எனினும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான அரசாங்கத்தின் சார்பான அந்நாட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை மீறி சுற்றுப் பயணம் மேற்கொண்டமையினால் அவர் கைது செய்யப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளார். 

வெனிசுவேலாவுக்குத் திரும்பினார் ஜுவான் கைடோ 
https://sigaram2.blogspot.com/2019/03/juan-guaido-return-to-venezuela.html 
#வெனிசுவேலா #ஜுவான்_கைடோ #அரசியல்_நெருக்கடி #அமெரிக்கா #ரஷ்யா #நிக்கோலஸ்_மதுரோ #கொலம்பியா #ஈக்குவடோர் #இடைக்கால_ஜனாதிபதி 

No comments:

Post a Comment