Pages

Thursday, October 4, 2018

உலகம் | நோபல் பரிசு 2018 | மருத்துவம் மற்றும் வேதியியல்

1901ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அல்ஃபிரெட் நோபல் என்பவற்றின் 1895ஆம் ஆண்டு உயிலின் படி நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. தனியொருவருக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, பொருளியல் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் நிகழ்த்தப்படும் சாதனைகளுக்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 


2018ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அக்டோபர் முதலாம் வாரத்தில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம் மற்றும் வேதியியல் துறைகளுக்கான விருதுகள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளன. 




நோபல் பரிசு 2018 

மருத்துவம் 

புற்றுநோய் சிகிச்சை முறை 

அமெரிக்கா - ஜேம்ஸ் அலிசன் 

ஜப்பான் - தஸூக்கு ஹோஞ்சோ 

இயற்பியல் 

சீரொளி இயற்பியல் (Laser Physics) 

அமெரிக்கா - ஆர்தர் ஆஷ்கின் 

பிரான்ஸ் - ஜெராரர்டு முரோ 

கனடா - டோனா ஸ்டிரிக்லாண்டு 

இவர்களில் முரோ நோபல் பரிசை வெல்லும் மூன்றாவது பெண் ஆவார். கடந்த 55 வருடங்களில் நோபல் பரிசை வெல்லும் முதலாவது பெண்ணும் இவரே. 

வேதியியல் 

அமெரிக்கா - ஃபிரான்சஸ் ஹெச் அர்னால்டு 

அமெரிக்கா - ஜார்ஜ் பி.ஸ்மித் 

பிரிட்டன் - வி.வின்டர் 

அமைதிக்கான நோபல் பரிசும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இந்த வருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட மாட்டாது என நோபல் பரிசு குழு அறிவித்துள்ளது. 

உலகம் | நோபல் பரிசு 2018 | மருத்துவம் மற்றும் வேதியியல்  
https://sigaram2.blogspot.com/2018/10/Nobel-Prize-2018.html 
#NobelPrize #ImmunoTherapy #EndCancer #JamesAllison #ChemNobel #Physics #Chemistry #நோபல்பரிசு #TasukuHonjo #ArthurAshkin #GerardMourou #DonnaStrickland #SIGARAM 

No comments:

Post a Comment