Pages

Tuesday, October 2, 2018

உலகம் | செய்தித் துளிகள் 01.10.2019

இந்தோனேசியாவில் சுனாமி 

கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவின் சுலவேசி தீவை 7.5 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. இதன் காரணமாக 6 மீற்றர் உயர சுனாமி அலைகளும் உருவாகின. 


சுனாமி அனர்த்தம் காரணமாக 832 பேர் பலியானதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 1.6 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. 

இயற்கை அனர்த்தத்தின் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து, உட்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு மற்றும் அத்தியாவசிய வசதிகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. 




இதுவரை இறந்தவர்களைப் புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளன. 

நோபல் பரிசு 2018 

இவ்வாண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படவுள்ளது. புற்றுநோய் குறித்த சிகிச்சை முறைகளுக்காக அமெரிக்காவின் ஜேம்ஸ் அலிசன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த தஸூக்கு ஹோஞ்சோ ஆகிய இருவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. 


ஜப்பான் சூறாவளி 

ஜப்பானில் சக்திவாய்ந்த சூறாவளியின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மணிக்கு 216 கி.மீ வேகத்தில் ட்ராமி சூறாவளி தாக்கியுள்ளது. விமானம் மற்றும் இரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏழரை லட்சம் வீடுகள் மின்சாரத்தை இழந்துள்ளன. 

உலகம் | செய்தித் துளிகள் 01.10.2019 
http://sigaram2.blogspot.com/2018/10/world-tamil-news-01102019.html  #உலகம் #செய்திகள் #இந்தோனேசியா #ஜப்பான் #அமெரிக்கா #நோபல்_பரிசு #NobelPrize2018 #Indonesia #Japan #WorldNews #SigaramNews 

No comments:

Post a Comment