Pages

Monday, October 8, 2018

இந்தியா | சாத்தியமற்ற எழுவரின் விடுதலை

ராஜீவ் காந்தி கொலைக்குற்றவாளிகள் எழுவரின் விடுதலை தொடர்பில் தற்போது உற்று நோக்கப்பட்டு வருகிறது. அண்மையில் இந்திய உச்ச நீதிமன்றம் எழுவரின் விடுதலை தொடர்பில் தமிழக அரசு தங்கள் முடிவை ஆளுநருக்குப் பரிந்துரைக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது. 


தீர்ப்பின் பிரகாரம் முழுமையான முடிவை எடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்குக் கிடையாது. தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம். இறுதி முடிவை தமிழக ஆளுநரே எடுப்பார். ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி. மத்திய அரசு எழுவரின் விடுதலையை ஏற்காது. ஆக ஆளுநரின் முடிவு என்னவாக இருக்கும்? 



ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாட்சியங்கள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது போன்ற பல்வேறு தகவல்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளிவந்திருந்தன. ஆனால் இந்தத் தகவல்களில் எவையுமே அடிப்படைத் தீர்ப்பை அசைக்கக் கூட முடியவில்லை. 

உச்ச நீதிமன்றம் சுற்றிச்சுற்றி மத்திய அரசின் கைகளுக்கே இறுதி முடிவை எடுத்துச் சென்றிருக்கிறது. ஆளும் பாஜக அரசோ அல்லது காங்கிரஸோ எழுவரின் விடுதலையை ஆதரிக்கப்போவதில்லை. பிறகு ஏதன் அடிப்படையில் தமிழக அரசை எழுவரின் விடுதலைக்காக அனைவரும் நம்பியிருக்கிறோம்? 

ராஜீவ் காந்தி கொலைக்குற்றவாளிகள் எழுவருக்கும் விடுதலை கிடைக்க வேண்டும் என்பதே நம் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் அது சாத்தியமற்றது. பாஜக அரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமே எழுவரின் விடுதலை சாத்தியம். மோடிஜி சம்மதிப்பாரா? கனவு நனவாகுமா? 

இந்தியா | சாத்தியமற்ற எழுவரின் விடுதலை  
https://sigaram2.blogspot.com/2018/10/un-expectable-release-seven-victims.html 
#ராஜீவகாந்தி #கொலை #விடுதலை #தமிழகஅரசு #பாஜக #காங்கிரஸ் #ஆளுநர் #நீதிமன்றம் #தீர்ப்பு #செய்தி #தமிழ்நாடு #தமிழ் #சிகரம் 

No comments:

Post a Comment