Pages

Tuesday, February 4, 2020

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்துக்கு சிறப்பு டூடில் வெளியிட்ட கூகுள்...!

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் இடம்பெறும் முதலாவது சுதந்திர தின நிகழ்வாகும். 

கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் இவ்வாண்டுக்கான சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. 

இந்த 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடில் வெளியிட்டிருக்கிறது. 



ஒவ்வொரு சிறப்பு நிகழ்வுகளுக்கும் சிறப்பு டூடில்களை வெளியிடுவது கூகுளின் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்துக்கு சிறப்பு டூடில் வெளியிட்ட கூகுள்...! 
https://sigaram2.blogspot.com/2020/02/google-doodle-for-LK-72nd-independence-day.html

Tuesday, January 28, 2020

கொரோனா வைரஸ் தாக்கம்: சீனாவில் இருந்து இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை



சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக சீனாவுக்கான இலங்கைத் தூதரகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கெப்பிட்டல் செய்திப் பிரிவுக்கு சீனாவுக்கான இலங்கைத் தூதரகத்தின் பதில் தூதுவர் கே. கே. யோகநாதன் கருத்து. 




கொரோனா வைரஸ் தாக்கம்: சீனாவில் இருந்து இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை 
https://sigaram2.blogspot.com/2020/01/coronavirus-srilankns-will-return-to-sri-lanka.html 
#Coronovirus #LK #LKA #SriLanka #Virus #China #RPC #BioWar #Airport #SriLankan #airlines #Embassy #News #NewsLK

Tuesday, December 17, 2019

பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

(Pic credit: It's respective owner)

தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் விசேட நீதிமன்றம் ஒன்றினால் இன்று இந்த தண்டனை விதிக்கப்பட்டது. 

எட்டுத்திக்கும் செய்தி சொல்லும் சிகரம் செய்திகள்...!

2006ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் செய்தித் துறையில் சேவையாற்றி வருகிறது சிகரம். 

கையெழுத்துப் பத்திரிகையாக ஆரம்பித்த பயணம், வலைத்தளம், இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளம் என பல்வேறு பரிமாணங்களை அடைந்திருக்கிறது. 

தொடர்ந்தும் மக்களுக்கு செய்திகளையும் பல்வேறு துறைசார்ந்த தகவல்களையும் கொண்டு செல்வதில் சிகரம் முன்னிற்கும். 

தொடர்ந்தும் எமது வலைத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் எமது செய்திகளுடன் இணைந்திருங்கள்...

Monday, December 16, 2019

தரமுயர்த்தப்பட்ட இராணுவத்தினர்

இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவியில் தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 



இராணுவ தளபதியின் கோரிக்கைக்கு இணங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். 

இராணுவ ஊடகப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 

இதன்படி, நான்கு பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர். 

அத்துடன், 25 கொலொனெல்கள் பிரிகேடியர்களாகவும், 34 மேஜர்கள் லெப்டினன்ட் கொலொனெல்களாகவும் தரமுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Monday, April 8, 2019

மலையகத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும்

யார் மலையகத் தமிழர்? 

மலையக மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வரலாறு 1800ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் ஆரம்பமாகின்றது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கள். கூலித்தொழிலாளர்கள் என்னும் அடிப்படையிலேயே அவர்கள் முதலில் வந்திருந்தனர். காலஞ் செல்லச்செல்ல அவர்களுக்கும் வாழ்வியல் மற்றும் அரசியல் ரீதியான உரிமைகள் வழங்கப்பட்டன. எனினும் 1948ஆம் ஆண்டில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் நிறைவேற்றப்பட்ட பல்வேறு சட்டங்கள் மலையகத் தமிழர்களை வெகுவாகப் பாதித்தன. 

Wednesday, March 6, 2019

அமெரிக்கா | 2020 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - ஹிலாரி கிளின்டன்

2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ஹிலாரி கிளின்டன் அறிவித்துள்ளார். 

Tuesday, March 5, 2019

வெனிசுவேலாவுக்குத் திரும்பினார் ஜுவான் கைடோ

தென்அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜுவான் கைடோ நேற்று (04) நாடு திரும்பினார். 



Friday, February 1, 2019

உலகம் | 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் கோரி பூகர்

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கோரி பூகர் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

செனட் சபையில் நியூ ஜெர்ஸி மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 49 வயதான கோரி பூகர், 2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக இன்று (பெப்ரவரி 01) காணொளி ஒன்றின் வாயிலாக அறிவித்தார். 

Saturday, November 3, 2018

இந்தியா | இன்றைய நாளேடு | வணக்கம் இந்தியா | 03.11.2018

தமிழகம், மதுரையில் இருந்து வெளியாகும் 'வணக்கம் இந்தியா' நாளிதழின் 03.11.2018 திகதிப் பதிப்பு மீதான 'சிகரம்' இணையத்தளத்தின் பார்வை இது. 8 பக்கங்களைக் கொண்ட இரு பகுதிகளுடன் 16 பக்கங்களில் இன்று வெளியாகியிருக்கிறது 'வணக்கம் இந்தியா' நாளிதழ். 

Friday, November 2, 2018

இலங்கை | லொக்கீல் தோட்ட பாலம் புனரமைக்கப்படுமா?

கொட்டகலை லொக்கீல் தோட்டத்தில் அமைந்துள்ள இரண்டு பாலங்களும் சேதமடைந்துள்ளன. மக்களும் வாகனங்களும் அன்றாடப் பாவனைக்காக பயன்படுத்திவரும் பாதையிலேயே இந்த பாலங்கள் அமைந்துள்ளன. அண்மைகாலமாக மலையகப் பிரதேசங்களில் தொடர்ச்சியாக மண்சரிவு அனர்த்தங்களை அவதானித்து வருகிறோம். 

இலங்கை | சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எப்போது?

இலங்கையில் மலையக மக்கள் என்னும் சமூகம் உருவான கடந்த 200 ஆண்டுகளில் காலம் காலமாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வந்துள்ளனர். சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் நாடற்றவர்களாக்கப்பட்டமை, வாக்குரிமை பறிக்கப்பட்டமை, இந்தியாவிற்கு திருப்பியனுப்பப்பட்டமை, பெருந்தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டமை போன்ற பிரச்சினைகளை மலையக மக்கள் சந்தித்துள்ளனர். 

Thursday, October 25, 2018

இலங்கை | மலையகத்தின் எதிர்காலம்

மலையகத்தினதும் மலையக மக்களினதும் எதிர்காலம் குறித்து சிந்தித்தாக வேண்டிய காலகட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம். 1800களில் தமிழகத்தில் இருந்து கூலிகளாக அழைத்து வரப்பட்ட மலையக மக்கள் இன்றும் அதே நிலையில் தொடர்வது வேதனைக்குரியது. வாக்குரிமை பறிப்பு, நாடற்றவர்களாக்கப்பட்டமை, தமிழகத்திற்கு மீண்டும் திருப்பியனுப்பப்பட்டமை, இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டமை என்று பல்வேறு துன்பங்களைக் கடந்து இன்றைய மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 

Monday, October 8, 2018

இந்தியா | சாத்தியமற்ற எழுவரின் விடுதலை

ராஜீவ் காந்தி கொலைக்குற்றவாளிகள் எழுவரின் விடுதலை தொடர்பில் தற்போது உற்று நோக்கப்பட்டு வருகிறது. அண்மையில் இந்திய உச்ச நீதிமன்றம் எழுவரின் விடுதலை தொடர்பில் தமிழக அரசு தங்கள் முடிவை ஆளுநருக்குப் பரிந்துரைக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது. 

Friday, October 5, 2018

இலங்கை | தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் 2018 வெளியீடு

கடந்த ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெற்றிருந்தது. இந்தப் பரிட்சையில் 3,55,326 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.