Pages

Saturday, November 3, 2018

இந்தியா | இன்றைய நாளேடு | வணக்கம் இந்தியா | 03.11.2018

தமிழகம், மதுரையில் இருந்து வெளியாகும் 'வணக்கம் இந்தியா' நாளிதழின் 03.11.2018 திகதிப் பதிப்பு மீதான 'சிகரம்' இணையத்தளத்தின் பார்வை இது. 8 பக்கங்களைக் கொண்ட இரு பகுதிகளுடன் 16 பக்கங்களில் இன்று வெளியாகியிருக்கிறது 'வணக்கம் இந்தியா' நாளிதழ். 


'இஸ்ரோவின் அடுத்த திட்டம், மிரட்சியில் சீனா-பாகிஸ்தான், போர்த்திறன் ஏவுகணைகள் தயாராவதால் பீதி' என்பதுதான் இன்றைய தலைப்புச் செய்தியாக இருக்கிறது. இந்தியாவின் போர்த்திறனை மேம்படுத்த மற்றும் பாதுகாப்பை அதிகரிக்க இஸ்ரோ ஏவவுள்ள இரண்டு செயற்கைக்கோள்கள் குறித்த விரிவான பார்வை இந்த செய்தியில் உள்ளடங்கியுள்ளது. 



'மோடிக்கே பெரும் ஆதரவு: கார்ப்பரேட்டுகளின் மோசடி கருத்துக் கணிப்பு' என்னும் தலைப்பில் டெய்லிஹன்ட் மற்றும் நீல்சன் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து 54 இலட்சம் பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு குறித்த விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தாலும் அதன் பின்னணியில் நியூட்ரினோ திட்டத்திற்கு சாதகமாக இருக்கும் அம்சங்கள் பற்றிய விவரங்கள் 'தேனி நியூட்ரினோ திட்டம் விரைவில் தொடங்கும், பசுமைத் தீர்ப்பாயம் பச்சைக் கொடி' என்னும் தலைப்பில் பதிவாகியுள்ளன. 

பேராசிரியை நிர்மலாதேவியின் விவகாரம் நாளொரு தகவலுடன் பரபரப்பாக இருக்கிறது. இன்றைய ஆசிரியர் தலையங்கம் 'பெரும்புள்ளிகள் தவறிழைக்கலாம்' என்னும் தலைப்பில் விசாரணையில் வெளிப்படைத் தன்மை தேவை என்பதை வலியுறுத்துகிறது. 

கட்சியை சுறுசுறுப்பாக்கிய பிரேமலதா - தாராளமாக புழங்க ஆரம்பித்த பணம் - உற்சாகத்தில் தே.மு.தி.க நிர்வாகிகள், தேர்தலில் எங்களுக்கே சீட் இல்லையா - காங்கிரஸ் ஆபீஸில் அரங்கேறிய ரகளை, ஆர்.கே நகர் தேர்தலுக்கு ரூ 2.5 கோடி வாங்கினேனா - வதந்தி பரப்பியதாக கூறிவிட்டு பதறும் டிடிவி உள்ளிட்ட பல்வேறு செய்திகள் இன்றைய நாளேட்டில் இடம்பெற்றுள்ளன. 



'இஎம்ஐ-வட்டியில்லா தவணை என்னும் கண்ணி' என்னும் தலைப்பில் வட்டியில்லாத் தவணையில் பொருட்களை வழங்கும் நிறுவனங்களின் சதியையும் பின்னணியையும் விரிவாக தருகிறது கட்டுரை. இதுவரை நாம் அறியாத அதிர்ச்சிகரமான பின்னணி இந்தக் கட்டுரையில் நமக்காகக் காத்திருக்கிறது. 

16 பக்கங்கள், 5 ரூபாய், அழகிய வடிவமைப்பு, செய்திகளின் தரம், தகவல்களின் விரிவான பார்வை, செய்திகளின் அமைப்பு என அசத்துகிறது 'வணக்கம் இந்தியா' நாளிதழ். ஆங்காங்கே காணப்படும் எழுத்துப் பிழைகளைத் திருத்திக் கொண்டால் குறையேதுமில்லை. 

இணையம்: http://www.vanakkamindianews.com/ 


டுவிட்டர்: https://twitter.com/vanakkam_india 

இந்தியா | இன்றைய நாளேடு | வணக்கம் இந்தியா | 03.11.2018 
https://sigaram2.blogspot.com/2018/11/vanakkam-india-today-paper-review-03-11-2018.html

No comments:

Post a Comment