Pages

Friday, November 2, 2018

இலங்கை | லொக்கீல் தோட்ட பாலம் புனரமைக்கப்படுமா?

கொட்டகலை லொக்கீல் தோட்டத்தில் அமைந்துள்ள இரண்டு பாலங்களும் சேதமடைந்துள்ளன. மக்களும் வாகனங்களும் அன்றாடப் பாவனைக்காக பயன்படுத்திவரும் பாதையிலேயே இந்த பாலங்கள் அமைந்துள்ளன. அண்மைகாலமாக மலையகப் பிரதேசங்களில் தொடர்ச்சியாக மண்சரிவு அனர்த்தங்களை அவதானித்து வருகிறோம். 





அந்த செய்திகளை கவனித்தால் அவ்வாறான அபாயங்கள் இருப்பது முன்னரே அவதானிக்கப்பட்டு அவற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உரிய காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பதனை உணரலாம். இந்த பாலங்களையும் இப்போதே புனரமைக்காவிட்டால் அலட்சியத்தினால் நேர்ந்த விளைவுகளின் செய்திகளில் பத்தோடு பதினொன்றாக இதனையும் கடந்து செல்ல நேரிடும். 



லொக்கீல் நீரோடைக்கு மேலாக செல்லும் பாலமும் லொக்கீல் ஆற்றுக்கு மேலாக செல்லும் பாலமுமே சேதமடைந்துள்ளன. இந்த இரண்டு பாலங்களும் மிகப் பழையவை. மக்களின் தினசரி போக்குவரத்து, வாகனப் போக்குவரத்து போன்றவற்றுக்கு இந்தப் பாலங்கள் இன்றியமையாததாக இருக்கின்றன. 



மேலும் தேயிலை கொண்டு செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட பாரவூர்திகளும் இந்த பாலங்கள் ஊடாகவே பயணிக்கின்றன. உயிரிழப்புகள் ஏற்பட்டு தலைப்புச் செய்தியாகிய பின் ஆறுதல் சொல்வதை விட இப்போதே பாலங்களைப் புனரமைத்து மக்களைக் காப்பாற்றலாமே? 

இலங்கை | லொக்கீல் தோட்ட பாலம் புனரமைக்கப்படுமா? 
https://sigaram2.blogspot.com/2018/11/lochiel-estate-bridge-must-repair.html 
#இலங்கை #மலையகம் #லொக்கீல் #அபிவிருத்தி #பாலம் #மக்கள் #பாதிப்பு #விபத்து #அனர்த்தம் #சீரமைப்பு #புனரமைப்பு #பிரதேச_சபை 

No comments:

Post a Comment